புதன், 11 மே, 2011

கோடையில் குளிர் தேடி...

பட்டமாய்ப் பறந்த மனது
ஆரவாரமாய்
அமைந்த பொழுது

சில்லென்று கழிந்த நாட்கள்...
சிறகடிக்கிறது
சில எண்ணங்கள்...

காத்திருந்து களித்த கண்கள்
காணாமல்
வலித்த நொடிகள்
வெறுமையிலும்
ஒரு சுகம்
அசை
போடுகிறது என் மனம்

நாட்கள் நகர்ந்தன...
மாதங்கள்
மாறின...
காலங்கள்
கழிந்தன...
வருடங்கள்
விரிந்தன...

கண்களின்
நிறம் கூட மாறிவிட்டது
சில
நினைவுகள் மாறவில்லை
நிலைமைகளை
உணரா மனம்
கோடையில்
குளிர் தேடி...

சனி, 9 ஜனவரி, 2010

கானல் நீர்

கண்கள் இரண்டு என்னிடம் உண்டு...
கனவுகள் ஆயிரம் கருவாய் உண்டு...

வார்த்தைகள் கோடி வளமாய் உண்டு...
ஆனால் வாழ்க்கை மட்டும் கானல் நீராய்...!

வியாழன், 17 டிசம்பர், 2009

உள்ளுணர்வின் ஒலி

விழிகள் இரண்டும் விடுபடத் துடிக்க
எண்ணங்கள் யாவும் எனக்கெதிராய் எழும்ப

பாதங்கள் இரண்டும் பயணத்தை மறுக்க

மருகும் மனதை மீட்பது எளிதோ?

திங்கள், 23 நவம்பர், 2009

கேள்விகள்

கண்ணுக்குள் கனவுகள் கருவாகும்போது

உள்ளுக்குள் உணர்வுகள் உருமாறுவதேனோ?


கருவான கனவுகள் கலைகின்றபோது
உயிரோட்டம் அது உரைகின்றதேனோ?


கேள்விகள்
பல அலையாகும்போது
கரையேற்றும் பதிலைக் கூறுவார் எங்கே?

வியாழன், 19 நவம்பர், 2009

தன்னிறைவு

சுட்டும் விழி இரண்டில் சுருண்டு விழும்
விட்டில் பூச்சி இல்லை - ஆனால்


தொட்டும் தொடாமல் செல்லும் சில கனவுகளில்

காற்றோடு காற்றாய் காணமல் போகிறேன்...?


இந்நாள் இருப்பின்றி இருண்டாலும்...

பின்னாளில் பொன்நாள் புணருமென்று..


முழுமதியும் மூச்சிரைக்கும் முன் நினைவுகளாய்...

காலம்அது கரைகிறது ஒரு
கற்பனையாய்...!

சனி, 14 நவம்பர், 2009

உயிரின் ஓசை

நிலவில் கால்வைப்பது கஷ்டமில்லை -
சிலர் நினைவுகளில் நிலைகொள்வதை ஒப்பிடுகையில்..
.
உயிரின் ஓசை உறங்கச் செல்கையில்
துயிலும் களைந்து துளிர் விடுகிறது...
தேடல்

தேடித் தேடிப் பார்க்கிறேன்...

தேடலும்
தித்திக்கும் -
தேடலில் உள்ள காதல் திகட்டாதவரை....